Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, April 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை
    உலகம்

    ‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹம்காம் அருகே உள்ள பைசரான் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த பல வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலில் இதுவும் ஒன்றாகும்.

    லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றே ஸ்ரீநகர் விரைந்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அங்கு கூடி இருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களை அமித் ஷா சந்தித்தார்.

    அப்போது, இந்தக் கொடிய தாக்குதலை நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த பாதுகாப்புபடையினர் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார்.

    துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி படப்பிடிப்புக்கு ChatGPT உதவியதா? பாதிக்கப்பட்டவரின் குடும்பம் OpenAI – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது

    April 8, 2026
    உலகம்

    டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி யுடி ஆஸ்டின் மாணவி சவிதா ஷனின் நினைவாக குடும்பம் உதவித்தொகையை அமைத்துள்ளது. உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    H-1B லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்: ரெடிட்டர் இந்தியாவிற்கு திரும்பி வர விரும்புகிறார், ‘வித்தியாசமான சோகமாகவும் குழப்பமாகவும் உணர்கிறேன்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    நியூயார்க் மாநிலத்தில் $200,000 மோசடி செய்த இந்தியர் கைது; மக்களை அழைத்து, ‘நீங்கள் வாரண்டில் தேடப்படுகிறீர்கள்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    கனடாவில் உள்ள இந்தியப் பெண் ‘கவனச்சிதறல் திருட்டு’க்கு பலியான பிறகு அதிர்ச்சியடைந்தார், நான்கு தங்க வளையல்கள் மணிக்கட்டில் கழற்றப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    உலகம்

    1965 இல் NYC ஒருமுறை வானளாவிய கூரைகளில் இருந்து விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டது உங்களுக்குத் தெரியுமா? இதோ எப்படி எல்லாம் தவறாக நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சந்திரனில் தண்ணீர் உள்ளது, ஆனால் அது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு போதுமானதாக இருக்காது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி படப்பிடிப்புக்கு ChatGPT உதவியதா? பாதிக்கப்பட்டவரின் குடும்பம் OpenAI – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது
    • சமூக அதிகாரத்தின் 5 அமைதியான சட்டங்கள், உங்களை உடனடியாக மேலும் மதிக்கும்
    • நீங்கள் கடந்த வாழ்க்கையை வாழ்ந்தீர்களா என்பது யாருக்குத் தெரியும்? உங்கள் ஆன்மா முந்தைய வாழ்க்கையில் வாழ்ந்திருக்கக்கூடிய 10 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானத்தில் ஏன் கருப்பு சாக்ஸ் அணியக்கூடாது : காரணம் உங்களை அதிர்ச்சி அடையும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.