Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, February 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»”நடுநிலை விசாரணைக்கு தயார்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பாக். பிரதமர்  ஷெபாஸ் அறிவிப்பு
    உலகம்

    ”நடுநிலை விசாரணைக்கு தயார்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பாக். பிரதமர்  ஷெபாஸ் அறிவிப்பு

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”நடுநிலை விசாரணைக்கு தயார்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பாக். பிரதமர்  ஷெபாஸ் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

    அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், “சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

    சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் ஏப்.21 திங்கள்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

    அதேபோல் அட்டாரி எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுக்காப்பைக் குறைத்தது போன்றவை அடங்கும். இதனிடையே அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியார்கள் மே 1ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் எச்சரிக்கை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பிஹாரில் நடந்த விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் பயங்கரவாதி​கள் நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி சுற்​றுலா பயணி​கள் சுட்டுக் கொல்​லப்​பட்டு உள்​ளனர். பஹல்​காம் தாக்​குதலில் மகனை, சகோ​தரனை, வாழ்க்​கைத் துணையை இழந்து பலர் தவிக்​கின்​றனர். இந்​தி​யா​வின் ஆன்மா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது.

    தாக்​குதலை நடத்​தியபயங்கரவா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். பயங்கரவாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

    பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய பயங்கரவா​தி​கள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களை தேடிக்கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு பயங்கரவா​தி​யும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களை துரத்​து​வோம். தீவிர​வா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்​தை​யும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்​டப்​படும்”. இவ்​வாறு அவர் பேசி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 1, 2026
    உலகம்

    ஹாலிவுட்டில் இருந்து சிலிக்கான் பள்ளத்தாக்கு வரை: எப்படி ஆஷ்டன் குட்சர் ஒரு பில்லியன் டாலர் தொழில்நுட்ப முதலீட்டு சாம்ராஜ்யத்தை ரகசியமாக உருவாக்கினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    லின்வே டிங் யார்? சீனாவிற்கான அமெரிக்க AI வர்த்தக ரகசியங்களை திருடியதற்காக முன்னாள் கூகுள் பொறியாளர் தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது சொந்த உணவகத்திற்கு தீ வைத்ததற்காக இந்திய வம்சாவளி நபர் கனடாவில் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    முதியவர்களைக் குறிவைத்து $55 மில்லியன் மோசடி: டெக்சாஸில் இரண்டு இந்திய நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தங்கம் வாங்கச் சொன்னார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    200,000 ரியல் எஸ்டேட் மோசடி செய்ததற்காக ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் உள்ள இந்திய ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார், வீடு வாங்குபவரை ஏமாற்ற சட்ட நிறுவனமாக ஆள்மாறாட்டம் செய்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வந்தி வர்மாவை சந்திக்கவும்: செவ்வாய் கிரகத்தில் AI- திட்டமிடப்பட்ட ரோவர் டிரைவின் பின்னணியில் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மிச்சிகன் விஞ்ஞானி 750 ஆண்டு பழமையான இந்திய கவிதைகளை பயன்படுத்தி மேற்கு இந்தியாவின் சவன்னாக்கள் ஒருபோதும் அழிக்கப்பட்ட காடுகள் இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கான இந்தியாவின் முதல் 5 நகரங்கள்
    • FAFO பெற்றோர்கள் என்றால் என்ன, பெற்றோர்கள் ஏன் அதைப் பற்றி பேசுகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • AI கண்ணாடிகள் பார்வையற்றவர்கள் தங்களை முதல் முறையாக பெரிய முன்னேற்றத்தில் பார்க்க உதவுகின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.