
சென்னை: சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் வெர்டிவ் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் துறையை தயார்படுத்த முடிவுசெய்துள்ளது.
இதற்காக இத்துறையில் நிபுணர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர் ) தொடர்பான முன்முயற்சி நடவடிக்கையாக, 2 ஆயிரம் மாணவர்களுக்கு டேட்டா சயின்ஸ் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து 36 மணி நேர ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக, 160 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஐஐடி வளாகத்தில் 5 நாள் ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும்.

