இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் 26-ம் தேதி முதல் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதன்படி, இந்தியாவின் இண்டிகோ நிறுவனம்
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கொல்கத்தா- குவாங்சு (சீனா) இடையே 26-ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோல, டெல்லி-குவாங்சு இடையே நவம்பர் 10-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.
இதுபோல, இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஷாங்காய்-டெல்லி இடையே நவ.9-ம் தேதி விமான சேவை (வாரத்துக்கு 3 நாள்) தொடங்கப்படும் என சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

