ஹைதராபாத்: ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ மாகண்டி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் இந்த தொகுதிக்கு கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 58 பேர் போட்டியிட்டனர். 49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.

