இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று கத்தார் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதேநேரத்தில், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

