அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மை டியர் சிஸ்டர்’. இதில், மம்தா மோகன் தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். திருநெல்வேலி பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்தா மோகன் தாஸ் அக்காவாகவும் அருள் நிதி தம்பியாகவும் நடித்துள்ளனர்.

