
புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்வர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதி சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் டிசம்பர் 1-ல் நமீபியாவுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி ஜெர்மனியுடனும், டிசம்பர் 5-ம் தேதி அயர்லாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக் அவுட் சுற்று டிசம்பர் 7 முதல் 13 வரை நடைபெறுகிறது.

