என் பெயர் பு.தீபிகா மாரிமுத்து. நான் வணிகவியல் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்ற பட்டதாரி. தற்போது நான் கண்ணகி நகர் பகுதியில் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். படித்திருந்தாலும், வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் வந்தது. வேலைக்குச் சென்றால், குடும்பத்திற்கான நேரம் சரியாக அமையவில்லை. கணவரின் வருமானத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த சிரமம் ஏற்பட்டது. இதனால் மனதில் எப்போதும் வருத்தம் இருந்தது.
அந்த நேரத்தில், என் தோழியின் மூலமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் முதல் தலைமுறை அறக்கட்டளை பற்றி அறிந்தேன். அங்கு கட்டணமில்லா Hand Embroidery பயிற்சி ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலமாக நடைபெறுவது என்பதை அறிந்து, உடனே சேர்ந்தேன். மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். இன்று, நான் டைலரிங் மற்றும் ஆரி ஹேண்ட் எம்பிராய்டரி கடை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இதன் மூலம் என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உறுதியான ஆதரவாக நிற்க முடிகிறது.

