நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 29, கேப்டன் சாய் கிஷோர் 16, பாபா இந்திரஜித் 6, ஆந்த்ரே சித்தார்த் 33, சோனு யாதவ் 28, வித்யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆந்திர அணி சார்பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ரெட்டி 75 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கரண் ஷிண்டே 64 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். அஸ்வின் ஹெப்பார் 21, கலிதிண்டி ராஜு 20 ரன்கள் சேர்த்தனர்.

