சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்.17-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதன் பிறகு சிறிய அளவில் குறையத் தொடங்கியது. நேற்று (அக்.24) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,400-க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.91,200-க்கும் விற்பனையானது.

