
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்களின் புத்தொழில் – அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ‘சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான புத்தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 38 தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

