
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்டோயே 17-21 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.

