சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும்.

