
‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தணிக்கையில் சிக்கியது. இது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வெற்றிமாறன். இதனால் நீதிபதிக்கு தனியாக ‘மனுஷி’ திரையிடல் நடைபெற்றது.

