
கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது. அது தற்போது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் அண்ட் நாட்டிக்கல் இன்ஜினியரிங் (சிப்நெட்) என்கிற பெயரில் செயல்படுகிறது.
1968ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்திலும் 1981ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடல் மீன்பிடிக் கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், இன்ஜினி யர்கள், இன்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் இது.

