
புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார்.
கடந்த 10-ம் தேதி டெல்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் நபி, கார் குண்டு தாக்குதலை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

