
வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் – குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆதரவாக அமைந்தது.

