சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தி வருகிறது. இதில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

