பிரதமர் மோடி மிகவும் சிறந்த நபர். அவர் வலிமையானவர். அவரை சம்மதிக்க வைப்பது சிரமம். ஆனால், நாங்கள் போராடுவோம் என்றார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாடுகளும் கையெழுத்திடும்.
போரை நிறுத்தினேன்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இரு நாடுகளும் போரிட்டபோது, நான் பிரதமர் மோடியிடம், ‘‘நீங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என கூறினேன். பின்னர் பாகிஸ்தான் பிரதமரை அழைத்தும் இதையே கூறினேன். 250 சதவீதம் வரிவிதிப்பேன் என நான் அச்சுறுத்தியபிறகு 48 மணி நேரத்துக்குள் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இந்த சண்டையில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனது தலையீடு காரணமாக கோடிக்கணக்கானோர் உயிர் தப்பினர். இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

