அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல உள்ளேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வர உள்ளார். தைவான் விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அதிகம் பேசினோம். இந்த விவகாரத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம். மிகவும் மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது பற்றி என்விடியா நிறுவன அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். சீனாவுடன் மிக விரைவில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதில் எங்களுக்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
இந்த சந்திப்பின்போது வர்த்தக பதற்றங்களை தணிக்க உதவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிக்டாக் உரிமை குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. டிக்டாக் தொடர்பான பிரச்சினைகளை முறையாக தீர்க்க அமெரிக்காவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

