ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

