ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்த நடிகை சந்திரிகா ரவி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘பிளாக்மெயில்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அடுத்து அவர் சாம் ஆண்டன் இயக்கும் ‘அன்கில்_123’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாகும் ‘சில்க் ஸ்மிதா: குயின் ஆஃப் தி சவுத்’ படத்தில் நடித்துள்ளார்.
இவர் அமெரிக்காவில், ‘ஐஹார்ட் ரேடியோ மற்றும் ருகுஸ் அவென்யூ ரேடியோ ஆகிய பண்பலை வானொலியுடன் இணைந்து ‘த சந்திரிகா ரவி ஷோ’ எனும் நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசனை தொடங்கி இருக்கிறார்.

