தொடர்ந்து வரும் அக்.27-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகார்ச்சனை, காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் உற்சவரிடம் சண்முகார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதலும், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும், மாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சண்முகார்ச்சனை ஆகியவையும், அக்.28ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது.
விழாவையொட்டி வரும் அக்.27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

