சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.

