
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி திருவிழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்பாட்டுடன் அக். 21-ம் தேதி (நேற்று) மாலை கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை அக். 22-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தொடங்குகிறது.

