சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெருவில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
இதுகுறித்து இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது: 1983-ம் ஆண்டு, நானும் எனது நண்பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.

