
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் பேசும்போது, “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது” என்றார்.

