முன்னதாக, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக்கூடியது. எனவே, இந்த இரண்டு குற்றவாளிகளையும் உடனடியாக வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளதால், அதன்படி இருவரையும் வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாய கடமை இந்தியாவுக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

