
கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சளாரான காகிசோ ரபாடா விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கார்பின் போஷ் சேர்க்கப்பட்டார்.

