
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின்ஹுட்’. 1980-களின் கிராமப் புற பின்னணியில், உருவாகியுள்ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்.
மறைந்த ஆர்என்ஆர் மனோகர், சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் நடித்துள்ளனர். லூமியர்ஸ் நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரித்துள்ளனர். நாத் விஜய் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

