
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன், ஆதி உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இதன் முதல் சிங்கிளான ‘தாண்டவம்’ பாடல் மும்பை ஜூஹுவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

