
புதுடெல்லி: எஃப்ஐஹெச் சார்பில் ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இளம் இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. கேப்டனாக டிராக்பிளிக்கர் ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

