அதேநேரத்தில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 7 லட்சம் டன் உப்பு மட்டுமே விற்பனையாகியுள்ளது. 12 லட்சம் டன் உப்பு, உப்பளங்களில் இருப்பில் உள்ளது. குஜராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்ததால், தூத்துக்குடி உப்பு அதிகளவில் தேங்கியுள்ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமதமாக மார்ச் மாதம் தொடங்கினால், கையிருப்பில் இருக்கும் உப்பு காலியாக வாய்ப்பு உள்ளது.
விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

