
சென்னை: சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, தமிழகத்தில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

