
புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட மருத்துவர் ஷாகின் சயீத் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக இந்தியாவில் செயல்பட்டது தெரியவந்தது.

