
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
கோவாவின் பனாஜியில் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்றின் டை-பிரேக்கரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரி கிருஷ்ணாவும், பெரு நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜோஸ் எடுவார்டோ மார்டினஸ் அல்கான்டாராவும் மோதினர். இதில் அல்கான்டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி கிருஷ்ணா வெளியேறினார்.

