
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ. 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்நிலைக் குழு என 2 குழுக்களை பள்ளிக்கல்வித் துறைசமீபத்தில் நியமனம் செய்தது.

