
கொல்கத்தா: கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

