
புதுடெல்லி: டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

