எனவே, அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டு வருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லலாம். அதன்பிறகு அமெரிக்க தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு பொறுப்பேற்பார்கள்.
நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கப்பல்கள் அல்லது செமி கண்டக்டர்களை உருவாக்கவில்லை. எச்-1பி விசா திட்டத்துக்கான ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை, முக்கியமான தொழில்களை அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைப்பதற்குமான முயற்சி. அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக சொல்லியுள்ளார். இது வலுவான வர்த்தகக் கொள்கையின் நன்மைகளை குடும்பங்கள் உணர வைக்கும் செயல்.” என்று அவர் கூறினார்.

