புதுடெல்லி: கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.ராஜசேகரன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், “நாட்டில் அதிக அளவில் சாலை விபத்து நடைபெறுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “சாலை விபத்தை தடுக்க பொது இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் அல்லாத வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதற்கான விதிகள் இதுவரை இயற்றப்படவில்லை எனில், மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் 139(1ஏ), 210டி பிரிவுகளின் கீழ், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சாலை பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.