பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மதுரையை சேர்ந்த எஸ்.முகமது அயாஸ் (10.88) வெள்ளிப் பதக்கமும், சென்னையை சேர்ந்த ஜெயராம் கதிர் (10.15) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்தில் தூத்துக்குடி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தங்கப் பதக்கம் வென்றது. சென்னை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெள்ளிப் பதக்கமும், கோவை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. கேம் பாயின்டுகள் கணக்கீட்டின்படி இந்த அணிகள் பதக்கங்களை வென்றன.
பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்தில் கோவை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. திருவள்ளூர் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெள்ளிப் பதக்கமும், தேனி அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.