சென்னை: பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் ராணி, இவரது வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை சராசரியாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மின்கட்ட ணம் வருவது வழக்கம். இந்த மாதம் ரீடிங் கணக்கெடுக்கும் போது 73.024 யூனிட் மின்சா ரம் பயன்படுத்தியதற்காக ரூ.8 லட்சத்து 38 ஆயிரத்து 747 மின் கட்டணமாக வந்துள்ளதைப் பார்த்து ராணி அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நந் தகுமார் என்பவருக்கும் ரூ.91 ஆயிரம் மின் கட்டணம் வந்தது. இதுபோன்று தொடர்ச்சியாக பாடி திருவல்லீஸ்வரர் நகரில் அதிக மின்கட்டணம் வந்ததற்கு மின் கணக்கீட்டாளரின் மெத்தனப் போக்கே காரணம் என வித்தனர். மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறான கணக்கீடு: இதுகுறித்து திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா பாண்டியன் கூறியதாவது: திருவல்லீஸ்வரர் நகர் பகுதியில் மின் கணக்கீட்டாளர் தவறு தலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளார். ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு மின் கட்டணத்தை சரியாக கணக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே கணக் கீட்டாளர்தான் தவறான கணக் கீடு செய்தார். அப்போது பணி யிடை நீக்கம் செய்தோம்.
இனி தவறு நிகழாது என அவர் விளக்கக் கடிதம் கொடுத்த பின்னர் மீண்டும் பணியில் சேர்த்தோம். தற்போது மீண்டும் தவறான கணக்கீடு புகார் வந்த பின், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணக்கீட்டாளர் சரியாகக் கணக்கிடாததால் அதிக மின் கட்டணம் வந்துள்ளது. வீட்டுக்கு திடீரென அதிக கட்டணம் வந்தால் மட்டும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்கத்தைவிட குறைவாக கட் டணம் வந்தாலும் மக்கள் மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில் கணக்கீட்டாளர் தவறுதலாக குறைவான ரீடிங் பதிவு செய்தாலும், அடுத்த முறை கணக்கிடும்போது முந்தை மாதத்தில் குறைக்கப்பட்ட யூனிட்டையும் சேர்த்து அதிக கட்டணம் வரும். எனவே குறைவான கட்டணம் வந்தாலும் உங்கள் பகுதி உதவி பொறியாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.