அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த தொகை அரசின் சொத்து அல்ல, அவை தனி நபர்களுக்கும் குடும்பங்களுக் கும் சொந்தமானவை. இந்த தொகைக்கான உரிமையாளர் களை கண்டுபிடித்து அவர் களிடம் திருப்பித் தர வேண்டும்.
உரிமை கோரப்படாத பணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். இது அவர்களு டைய பணம். உரிய ஆவணங்கள் இல் லாமை, மறந்த காப்பீட்டு திட் டங்கள் அல்லது விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங் களால் உரிமை கோரப்படாத தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உரிமை கோரப் படாத தொகையை உரியவர் களிடம் ஒப்படைக்கும் நோக்கத் துடன், உங்கள் பணம், உங் கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு நடைபெறம் இந்த பிரச் சாரம், விழிப்புணர்வு, அணுகல் மற்றும் நடவடிக்கை ஆகிய 3 தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
உரிமை கோரப்படாத பணம் குறித்து மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவது, ரிசர்வ் வங்கியின் யுடிஜிஏஎம் தளத் தின் மூலம் உரிமை கோரப்ப டாத பணம் பற்றி தேட வழி வகை செய்தல் மற்றும் உரிமை யாளர்கள் ஏதாவது ஓர் ஆதா ரத்தை குறிப்பிட்டால்கூட அவர் களுடைய பணத்தை திருப்பித் தர அதிகாரிகள் முன்வருதல் ஆகியவைதான் இந்த பிரச்சா ரத்தின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.