புதுடெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் ஏற் படுத்தப்பட்டுள்ள இணையதளம் வழியாகவும், சு-சுவாகதம் என்ற
செல்போன் செயலி வழியாக வும், இந்திய விசா ஆன்-லைன் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
தங்களது விமானம் வெளி நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள்ளாக விண்ணப் பிக்க வேண்டும். அதே நேரத் தில் இது விசா கிடையாது. சுற் றுலா, வணிகம், படிப்புக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக விசா வைத்திருக்க வேண்டும். இந்த இ-அரைவல் அட்டை என்பது, நாம் இந் தியா வருவதற்கு முன்னதாக தேவைப்படும் ஒரு அனுமதிச் சீட்டு மட்டுமே என்பதை பயணி கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.