சில்சர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்’ என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப் பூருக்கு சென்றிருந்த பாடகர் ஜூபின் கார்க் செப்டம்பர் 19-ம் தேதி திடீரென மரணமடைந்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கலைத்துறையில் அவரது அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் விதமாகவும் ஜுபின் கார்க்கின் ஆத்மார்த்தமான இசையில் உருவாகி பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலான ‘மாயாபின்’ பெயரை புதிதாக பிறந்த பெண் யானைக் குட்டிக்கு சூட்டுவதென முடி வெடுக்கப்பட்டது. இவ்வாறு சோனாலி தெரிவித்துள்ளார்.