Last Updated : 06 Oct, 2025 07:43 AM
Published : 06 Oct 2025 07:43 AM
Last Updated : 06 Oct 2025 07:43 AM

புதுடெல்லி: பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை.
இதையைடுத்து பூடான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் 2 ஹெலிகாப்டர்களில் உடனடியாக விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய ஊழியர்கள் இருவரை மீட்டனர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருவரையும் பூடான் ஹெலிகாப்டர் பின்னர் மீட்டது. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி உதவி செய்த இந்திய ராணுவத்தினருக்கு ராயல் பூடான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!