கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு நேற்று கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து முதல்வரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால், எந்த கேள்விக்கும் அவரிடம் இருந்து பதில் வராது. கரூர் பற்றி கேட்டால் உடனே மணிப்பூர் பற்றி பேசுகின்றனர். மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்சினை. அதற்கும் கரூர் சம்பவத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் ஒப்பிடக் கூடாது. அப்படி ஒப்பிட்டால், தேவையில்லாத பல விஷயங்களை பேச வேண்டி வரும்.
ஒரு நபர் விசாரணை….: கரூர் சம்பவம் நடந்த உடனே அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விஜய் கூறினார். ஆனால், ஒரு நபர் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் இருந்து முதல்வர் பின்வாங்கியது ஏன் என்றும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.