சென்னை: மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
கரூருக்கு வந்த பாஜக எம்.பி.க்கள் விசாரணை குழுவுடனும் அண்ணாமலை சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் திடீரென நேற்று கோவையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், அமித் ஷா மற்றும் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அப்போது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.